ஜெனிவா ஐ.நா. மாநாடு: இலங்கையை கேள்விக் கணைகளாள் துளைத்த இந்தியா, அமெரிக்கா, கனடா!
ஜெனிவா:ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கேள்விக் கணைகளை ஏவின.
இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்து:
இலங்கை வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்தவேண்டும். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்ப தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இறுதிப் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றியும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர் பிரச்சனைக்கு விரைவான அரசியல் தீர்வு அவசியம்.
தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணுவம் திரும்ப ஒப்படைக்கவும் ராணுவ உயர் பாதுகாப்பு வளையங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியது..
இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலமாக இலங்கையின் அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13-வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்,
பொதுமக்களின் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு ஆகியவை குறித்து கவலை தெரிவித்த இந்தியா, அடுத்த ஆண்டிலாவது தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் கருத்து:
இலங்கையில் தற்போது தலைமை நீதிபதியை நீக்குவதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டிருப்பது நீதித்துறையில் அரசின் தலையீடாகும். இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகள் பெரும் கவலை ஏற்படுத்துகிறது. இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழர் பகுதிகளில் ராணுவத்தைக் குறைத்தல், தேசிய இனப் பிரச்சனைக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், அங்கீகரிக்கப்படாத ராணுவக் குழுக்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யவும் அமெரிக்கா வலியுறுத்தியது.
கனடாவின் கருத்து:
இலங்கையின் வடக்குப் பகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். மனித உரிமைகளைக் காக்க உரிய நடவடிக்கைகள் அவசியம்.,
ஜெர்மன் தரப்பில், இலங்கையின் தலைமை நீதிபதியை நீக்குவதற்கான அரசின் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மன் தரப்பில் கருத்துகளைத் தெரிவித்த போது இலங்கை தரப்பில் பதில் தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications