இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஒதுக்கப்பட்ட ஜெகத்ரட்சகனுக்கு தற்போது வர்த்தகம் மற்றும் தொழில்துறை என மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் 28-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையை மாற்றியமைத்தார். அப்போது 22 புது அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டன.

இதில் திமுகவைச் சேர்ந்த இணை அமைச்சரான ஜெகத்ரட்சகன் வகித்து வந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மாற்றப்பட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது திடீரென இந்தத் துறையும் மாற்றப்பட்டு வர்த்தகம் மற்றும் தொழில் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு லால்சந்த் கட்டாரியா, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட 3 அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+