நாமக்கலில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி-4 பேர் 'சீரியஸ்'
நாமக்கல்: நாமக்கலில் உருக்கு ஆலையில் இருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இதில் உருகிய நிலையில் இருந்த இரும்பு தெறித்து 2 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்த தொட்டியம் தோட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை உள்ளது. இங்கு இரும்பு கழிவுகளை உருக்கி இரும்பு கம்பிகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் பீகாரை சேர்ந்த வினோத்(45), ஒரிசாவை சேர்ந்த பரத்குமார்(47), நிரஞ்சன்(29), அமர்(27), சிதன்உமா(25), ஜனன்(23) ஆகிய 6 பேர் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். இவர்கள் ஆலையில் இருந்த பாய்லரில் இரும்பு துகள்களை போட்டு கொண்டிருந்தனர். பாய்லர் கொதித்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் காலை 8 மணி அளவில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இதில் பாய்லரில் கொதித்து கொண்டிருந்த உருகிய நிலையில் இருந்த இரும்பு குழம்பு, பணியாளர்களின் மீது விழுந்தது.
இதில் உடல் முழுவதும் வெந்த வினோத், பரத்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications