ஒபாமா அதிபரானால்... இலங்கைத் தமிழர்களுக்கு என்ன மாற்றம் வரும்?

விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி இந்தியாவுக்கு மறைமுக நெருக்கடியை இலங்கை கொடுத்து வருகிறது.
இந்திராகாந்தி காலத்தில் திரிகோணமலையில் அமெரிக்க ராணுவத் தளம் அமைக்க விரும்பியதால்தான் போராளிகளை ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்தார்.
அவர் தொடர்ந்து சில காலம் இருந்திருந்தால் பங்களாதேசத்தை போல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்து கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இப்போது கிட்டத்தட்ட மீண்டும் அதே நிலை. இலங்கையுடன் சீனாவும் பாகிஸ்தானும் கைகோர்த்துக்கொண்டிருக்கும் போது, இந்தியா தனது எதிர்கால பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அமெரிக்கா ஏறகனவே இலங்கை ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவர முக்கிய பங்காற்றியுள்ளது. தொடர்ந்து, மனித உரிமைகளுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறது.
பாகிஸ்தான், சீனாவுடன் ஏற்கனவே நெருக்கடி நிலை இருக்கும் போது அவர்களுடன் கூட்டு வைத்துள்ள இலங்கை இந்தியாவுக்கு இன்னும் ஒரு தலைவலியாக உருவாகி வருகிறது. சீனாவை கட்டுக்குள் வைத்திருக்க ஒபாமா விரும்பும் வேளையில், இலங்கையை வழிக்கு கொண்டுவர இந்தியாவுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒபாமா மீண்டும் அதிபரானால், இலங்கை விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்குரிய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது. கிழக்கு திமோர், தெற்கு சூடான், துஸ்னியா வரிசையில் அது அமைந்தால் ஆச்சரியமில்லை என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
ஆனால் ராம்னி அதிபரானால், நிச்சயம் அமெரிக்க ஆதரவு பெற்ற சீனா - இலங்கை - பாகிஸ்தான் என மூன்று எதிரிகளை ஒன்றாக எதிர்நோக்க வேண்டிவரும் இந்தியா. இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை இவர்களே தீர்மானிக்கும் நிலை வரும்!
-தமிழ்.ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications