சிம்லா: ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 46,08,359. இம்மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் முதன்மையான போட்டி நிலவியது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்து மத்திய அமைச்சராகி ஊழல் புகாரில் சிக்கி ராஜினாமா செய்த வீரபத்ர சிங், தமது சொந்த ஊரான ராம்பூர் நகரில் வாக்களித்தார். தற்போதைய முதல்வரான பிரேம்குமார் துமுல் சமிர்புரில் வாக்களித்தார். மத்திய அமைச்சரான ஆனந்த் சர்மா சிம்லாவில் வாக்களித்தார்.
இன்றைய வாக்குப் பதிவின் தொடக்கத்தில் முதல் 4 மணி நேரத்தில் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பிற்பகலில் விறுவிறுவென வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 2 மணி நிலவரப்படி 45% வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப் பதிவு முடிவில் மொத்தம் 60% வாக்குகள் பதிவாகி இருந்தன.
கடந்த 2007-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 41 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றாலும் அடுத்த மாதம் 20-ந் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications