நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்து கணவனும் தற்கொலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலையை அடுத்த குமாரபுரம் சரல் விளையை சேர்ந்தவர் ஜான் சுரேஷ் (29). இவரது மனைவி சகாய சுஜா (22). இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் சிஜோ என்ற ஆண் குழந்தை உள்ளது.
மனைவி சகாயசுஜாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஜான் சுரேஸ் அடிக்கடி மனைவியை அடித்து உதைத்தார். சனிக்கிழமையன்றும் இதேபோல் சண்டை ஏற்படவே அரிவாளால் எடுத்து சுஜாதாவை வெட்டினார். இதில் சகாய சுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். குழந்தையும் வெட்டுப்பட்டதில் படுகாயம் ஏற்பட்டது.
மனைவியை கொலை செய்த ஜான் சுரேஸ் தலைமறைவாகிவிட்டார். கொலை தொடர்பாக கொற்றியோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து சகாய சுஜாவின் சடலைத்து கொண்டு வந்து கணவன் வீடு முன்பு புதைக்கப்போவதாக சகாய சுஜாவின் உறவினர்கள் கூறினர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சகாய சுஜாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஜான் சுரேசின் சொத்தில் ஒரு பகுதியை அவரது குழந்தையின் பெயரில் பதிவு செய்து கொடுப்பதாக ஜான் சுரேசின் உறவினர்கள் தெரிவித்ததையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இன்று காலை சகாய சுஜாவின் உடல் அடக்கம் நடக்க இருந்த நிலையில் ரப்பர் தோட்டத்தில் ஒரு பிணம் கிடப்பதாக கொற்றியோடு போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடப்பது ஜான் சுரேஷ் என்பது தெரியவந்தது.
மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய ஜான் சுரேஷ் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து ரப்பர் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது கணவன் - மனைவி இருவரின் உடலையும் ஒரே இடத்தில் புதைக்க அவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications