தீபாவளி கூட்டத்தில் 'கைவரிசை' காட்டும் திருடர்களை பிடிக்க சென்னை போலீஸ் 'ரெடி'

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட உள்ள திருடர்கள் பிடிக்க, சென்னை போலீசார் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிக்கை நெருங்கியுள்ள நிலையில், பொருட்களை வாங்க மக்கள் சென்னை மக்கள் அலை போல திரண்டு வருகின்றனர். சென்னை நகரின் முக்கிய வியாபார பகுதிகளான தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில், மக்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது.

பொருட்களை வாங்க வரும் மக்களின் கூட்ட நெரிசலில் நுழையும் திருடர்கள், பிக்பாக்கெட் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை தடுக்க போலீசார் வியாபார பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தி.நகர்:

தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் போலீசார் கூட்ட நெரிசலின் இடையே மாறுவேடத்திலும், போலீஸ் உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் அதிக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

புரசைவாக்கம்:

புரசைவாக்கத்தில் டவுட்டன் பாலம் அருகே உள்ள சந்திப்பில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களின் மூலம் ஆய்வு நடத்தி வருகின்றனர். பொது மக்களுக்கு நடந்து செல்ல வசதியாக சாலையோரத்தில் கயிறு கட்டி பாதை அமைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் சற்று குறைந்துள்ளது. மேலும் கூட்ட நெரிசல்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பாரிமுனை:

பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால் பொது மக்கள் இடையே நுழையும் திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணி்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பூக்கடை பகுதியில் இந்த முறை பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தீவுத்திடல்:

இந்த முறை தீவுத்திடலில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தவிர்க்கும் வகையில், கூட்ட நெரிசலில் மக்கள் ஜாக்கிரதையாக செயல்படுமாறு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+