நாளை அதிபர் தேர்தல்.. ஒபாமாவுக்காக 'டைட்' உடையில் ஆடி வாக்கு சேகரித்த கேத்தி பெர்ரி!
மில்வாக்கி (விஸ்கான்சின்): அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பராக் ஒபாமாவின் பார்வர்ட் என்ற பிரசார வாசகம் பொறிக்கப்பட்ட இறுக்கமான, கவர்ச்சி உடை அணிந்து ஆடிப் பாடி வாக்கு சேகரித்தார் பிரபல பாடகி கேத்தி பெர்ரி.
ஒபாமா, ஒபாமா, ஒபாமா... இதுதான் அமெரிக்கா முழுவதும் பெரும்பான்மையாக ஒலிக்கும் குரலாக மாறியுள்ளது. நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்கா முழுவதும் படு உஷ்ணமாகியுள்ளது. சான்டி புயலின் தாக்குதல் சோகத்தையும் தாண்டி ஒபாமா புகழ் பாடும் கோஷங்கள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்க தேச பக்திப் பாடலுடன் பாட ஆரம்பித்த கேத்தி பெர்ரி, தொடர்ந்து ஒபாமாவை ஆதரித்துப் பாடினார். படு கவர்ச்சிகரமான மேக்கப்புடனும் பாடிய கேத்தி அத்தனை பேரின் இதயங்களையும் கொள்ளை கொண்டு விட்டார். பாடலின் இடையே, சாண்டி புயலில் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள் என்ற கோரிக்கையையும் அவர் வைக்கத் தவறவில்லை.
நம்ம ஊரில் சி.ஆர்.சரஸ்வதி, சங்கவி, விந்தியா போன்ற நடிகையர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதைப் போல அந்த ஊரில் கேத்தி பெர்ரி போன்றவர்களும் ஈடுபடுகிறார்கள் போல...!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications