இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்... வெல்லப் போவது யார்?

இப்போதைய அதிபர் ஒபாமாவும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் ராம்னியும் நேரடிப் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒபாமாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டாலும் கூட ராம்னியும் கடும் போட்டியைக் கொடுத்து வருவதால் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் தேள்கொட்டினால் அம்பாசமுத்திரத்தில் நெறிகட்டும் என்று சொல்லும் அளவுக்கு, உலக நாடுகளை பாதிக்கும் சக்தி மிக்கது அமெரிக்க அதிபர் பதவி.
எந்த நாட்டில் தேர்தல் நடந்தாலும், அது உள்ளூர் சமாச்சாரமாகத்தான் தெரிகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது உலகம் முழுக்க கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
இந்த தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமைக்கு பிறகு வரும் முதலாவது செவ்வாய்க்கிழமையில் நடப்பது வழக்கம்.
தற்போது அதிபராக இருந்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்து ஆண்டு தொடக்கத்தில் முடிவடைவதால், புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் கவர்னர் மிட் ராம்னி நிறுத்தப்பட்டுள்ளார்.
இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். நேரடி தொலைக்காட்சி விவாதத்தின்போது, முதல் முறை ராம்னி கை ஓங்குவது போல தெரிந்தாலும், அடுத்தடுத்த விவாதங்களில் ஒபாமா அசத்தினார்.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் ஒபாமாவுக்கு சில மாநிலங்களிலும், மிட் ராம்னிக்கு சில மாநிலங்களிலும் அதிக ஆதரவு உள்ளது. இதையெல்லாம் ஏற்கெனவே தமிழ்.ஒன்இந்தியாவின் சிறப்புக் கட்டுரைகளில் பார்த்திருப்பீர்கள்.
அமெரிக்காவில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனித்தனியாக தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையான மக்கள் வாக்குகளை யார் பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் வழங்கப்படும்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் சபை உறுப்பினர்கள் பின்னர் கூடி அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பார்கள். யார் அதிக தேர்தல் சபை வாக்குகளை பெறுகிறாரோ, அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன அதாவது நம்ம எம்பிக்கள் மாதிரி. இதில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறுபவர் அதிபர் ஆவார்.
இந்த நடைமுறை அனைத்தும் ஜனவரி முதல் வாரத்தில் முடிந்துவிடும். ஜனவரி 6-ம் தேதி யார் அதிபர் என்று முறைப்படி அறிவிக்கப்படும். ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவி ஏற்பார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications