வரத்து குறைவு: அரிசி விலை கடும் உயர்வு

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் சாரல் பொய்த்துவிட்டதால் கார் நெல் சாகுபடி நடைபெறவில்லை. நெல் தட்டுப்பாடு காரணமாக பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் அரவைக்கு நெல் கிடைக்கவி்ல்லை. மேலும் அறிவிக்கப்படாத 14 மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டால் பாதிக்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.
மாவட்ட பகுதிகளில் நெல் மகசூல் இல்லாததால் கோபிச்செட்டிபாளையம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி மற்றும் ஆந்திராவில் இருந்து நெல் வரத்து இருந்தது. இந்நிலையில் நிலம் புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வயல் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நெல் அறுவடை செய்ய முடியாமல் போனது. இதன் காரணமாக அங்கிருந்தும் நெல் வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதனால் நெல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
டீலக்ஸ் பொன்னி அரிசி குவிண்டால் ரூ.3200லிருந்து ரூ.3500 ஆகவும், செல்லப்பொன்னி ரூ.2800லிருந்து ரூ.3000 ஆகவும், அம்பை 16 ரகம் ரூ.2500லிருந்து ரூ.2700 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. தொடர் மின்தடை, நெல் வரத்து குறைவு ஆகியவற்றால் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் சரிவர இயங்கவில்லை. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications