பாஜகவில் 'நிலம் புயல்': கட்காரி விலக ஜேத்மலானி தலைமையில் மூத்த தலைவர்கள் போர்க் கொடி!

பெரும் ஊழல் குற்றச்சாட்டியுள்ள சிக்கியுள்ள பாஜக தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த எம்பியான ராம்ஜேத்மலானியும் அவரது மகன் மகேஷ் ஜேத்மலானியும் போர்க் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த விஷயத்தில் பிற மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், சத்ருகன் சின்ஹா ஆகியோரும் தனது கருத்தை ஆதரிப்பதாகவும், தன்னிடம் அவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் ஜேத்மலானி கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் ஆதரவால் பயம்...
இதையடுத்து பாஜகவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்காரியை ஆர்எஸ்எஸ் ஆதரிப்பதால் அவருக்கு எதிராக குரல் கொடுக்க பிற தலைவர்கள் அஞ்சி வருகின்றனர்.
இந் நிலையில், பாஜகவில் நிலவும் கோஷ்டிப் பூசலாலும் ஊழல் குற்றச்சாட்டாலும் பொது மக்கள் மத்தியில் கட்சியின் பெயர் கெட்டுப் போய் வருவதால், இந்த விவகாரத்தில் சமரச தீர்வு காண, மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரும் சுவதேசி ஜாக்ரன் மஞ்ச் ஒருங்கிணைப்பாளருமான ஆடிட்டர் குருமூர்த்தி யஷ்வந்த் சின்ஹாவையும் ஜஸ்வந்த் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.
அத்வானியுடன் குருமூர்த்தி சந்திப்பு..
அதே போல மூத்த தலைவர் அத்வானியையும் குருமூர்த்தி சந்தித்துப் பேசினார்.
மேலும் ராம் ஜேத்மலானியுடனும் அவர் தொடர்பில் உள்ளார். இது குறித்து நிருபர்களிடம் பேசிய ஜேத்மலானி, கட்காரிக்கு எதிராக மேலும் கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று குருமூர்த்தி என்னிடம் கேட்டுக் கொண்டார் என்றார். இன்று மாலை இருவரும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதற்கிடையே, வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு கட்காரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது.
இதனால் கட்காரியை ஆர்எஸ்எஸ் விட்டுக் கொடுக்காது என்றே தெரிகிறது. இந் நிலையில் தான் இந்த விவகாரத்தில் குருமூர்த்தி தலையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலும் தேர்தல் பயமும்...
ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து கட்காரியை பதவி விலக வைத்தால், அது ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்துக்கு பெரும் சரிவாக அமைந்துவிடும் என்று ஆர்எஸ்எஸ் ஆதரவு தலைவர்கள் கருதுகின்றனர். இது வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.
இதனால் தான் இப்போதைக்கு அமைதி காக்குமாறு கட்காரி எதிர்ப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வேறு ஒரு காரணத்தை வைத்து கட்காரியை பின்னர் மாற்றலாம் என்றரீதியில் சமாதான முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
கட்காரியை கைவிட்டாரா சுஷ்மா?:
இந் நிலையில் மூத்த பாஜக தலைவரான சுஷ்மா சுவராஜை கட்காரி சந்தித்துப் பேசினார். ஆனால், இனியும் அவரை கட்சியால் ஆதரிக்க முடியாது என்று சுஷ்மா கூறியதாகவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் கட்சியின் தலைமைப் பதவி போக வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாயின.
ஆனால், இதை சுஷ்மா மறுத்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், கட்காரிக்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன் என்று கூறியதாக வெளியான செய்தி தவறானது. நான் எப்போதும் கட்காரியை ஆதரித்திருக்கிறேன். மீண்டும் எனது ஆதரவு தொடரும் என்றார்.
தலைவர் பதவிக்கு சுஷ்மாவும் குறி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்காரிக்கு எதிரான தனது முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு அத்வானிக்கு ராம் ஜேத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அத்வானிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் அத்வானி தொடர்ந்து பெரும் மெளனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அத்வானிக்கு மீண்டும் தலைவர் பதவி?:
இந் நிலையில் நிலைமையை சமாளிக்க அத்வானியிடமே மீண்டும் கட்சியின் தலைவர் பதவி தரப்படலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications