காதலனைக் கரம்பிடிக்க ‘நாட்டை’விட்டே ஓடி எல்லை தாண்ட முயற்சி: காஷ்மீரில் இளம் பெண் கைது
ஜம்மு காஷ்மீர்: எல்லை தாண்டிய தீவிரவாதிகள்.. எல்லை தாண்டிய தாக்குதல்கள்.. இந்தப் பட்டியலில் எல்லை தாண்டிய ஒரு காதல் கதையும் இடம்பிடித்திருக்கிறது..
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மேந்தர் வட்டத்தைச் சேர்ந்த கோலட் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளபெண் இரும் ஃபாத்திமா. இவருக்கு நாளை மறுநாள் பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க... இவரோ ‘எல்லை தாண்டி' செல்ல முயற்சித்த குற்றத்துக்காக பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எல்லை தாண்டியது ஏன்?
வீட்டை விட்டு ஓடிப் போகிறவர்களை மிஞ்சி ‘நாட்டை'விட்டே இந்த இளம்பெண் ஓட முயற்சித்ததற்கு காரணம் ஒரு காதல்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஃபாத்திமாவின் உறவினர் பையன் ஒருவன் இருக்கிறான். அவன் கடந்த ஆண்டு முறையான அனுமதி பெற்று ஃபாத்திமா ஊருக்கு வந்திருக்கிறான். இருவரும் சந்தித்து பேசி காதலில் வீழ்ந்திருக்கின்றனர். அதன் பின்னர் ஃபேஸ்புக்கில் இந்தக் காதல் தொடர்ந்திருக்கிறது.
இதற்கிடையில்தான் ஃபாத்திமாவுக்கு வீட்டில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஏற்பாடுகளும் செய்துவிட்டனர். இந்நிலையில் வேறுவழியின்றி தமது காதலனுடன் இணைவதற்காக ‘எல்லை தாண்டி' பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் செல்ல முயற்சித்திருக்கிறார். அப்போது பாதுகாப்பு படையினர் வசம் மாட்டிக் கொள்ள இப்போது ஜம்மு காஷ்மீர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார் ஃபாத்திமா.
ஒரு காதல் என்ன பாடுபட்டிருக்கிறது?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications