கட்காரி தலைவராக நீடிக்க பாஜகவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது: ராம் ஜெத்மலானி

நேற்று தான் கட்காரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவரது மகன் மகேஷ் ஜேத்மலானி பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
நிதின் கட்காரி, மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து பல்லாயிரம் கோடி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குழு. இதை கட்காரி மறுத்து வந்தாலும், அவர் தவறு செய்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஆனால், ஆர்எஸ்எஸ் பின்பலம் கொண்ட கட்காரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது.
இந் நிலையில் இன்று ராம் ஜேத்மலானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
கடும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் கட்காரி உடனே பதவி விலக வேண்டும்.
பாஜகவில் கட்காரிக்கு எதிரான மன நிலையே நிலவுகிறது. மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், சத்ருகன் சின்ஹா ஆகியோ கட்காரி கட்சித் தலைவராக நீடிப்பதை எதிர்த்து வருகின்றனர்.
இவர்கள் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். கட்காரிக்கு எதிரான எனது மகன் மகேஷ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது மிகச் சரியான நடவடிக்கையே என்றார் ஜேத்மலானி.
கட்காரியைப் பிடிக்காவிட்டாலும் அவரை எதிர்த்தால் ஆர்எஸ்எஸ்சின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications