மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் 6 பேர் மாயம்
Subscribe to Oneindia Tamil
குமரி: குமரி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 6 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி துவங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வாவாதுறையைச் சேர்ந்தவர் ஜேர்மானஸ். அவருடைய விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த போஸ், ஜூட், எட்வின், கெவின், கெஸ்டஸ், சுபின் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 31ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் சனிக்கிழமை கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் நேற்று காலை வரை கரை திரும்பவில்லை. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் இது குறித்து கன்னியாகுமரி மீன்துறை உதவி இயக்குனருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் மீனவர்களை தேடும் பணி தொடங்கியுள்ளது.
மீனவர்கள் மாயமாகியுள்ளது அவர்களது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications