சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவி வடக்கு, தெற்கு என 2 ஆக பிரிப்பு
சென்னை: சென்னையில் இதுவரை இருந்து வந்த கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவி இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இனி வடக்கு மற்றும் தெற்கு என இரு கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் இருப்பார்கள்.
சென்னை மாநகரம் விரிவாக்கப்பட்டு காவல் எல்லையும் விரிவுபடுத்தப்பட்டது. அதாவது செங்கை கிழக்கு போலீஸ் மாவட்டம் சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக இணைந்த பகுதிகளைக் கவனிப்பதற்காக கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது.
தற்போது இந்தப் பதவியை இரண்டாகப் பிரித்துள்ளனர். அதாவது வடக்குப் பகுதிக்கு ஒரு கூடுதல் போலீஸ் கமிஷனரும், தெற்குக்கு ஒரு கூடுதல் போலீஸ் கமிஷனரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஏற்கனவே கூடுதல் கமிஷனராக இருந்து வரும் தாமரைக்கண்ணன் இனி வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக செயல்படுவார். அவரது பொறுப்பில், கிழக்கு, வடக்கு இணை ஆணையங்கள் வரும். மேலும் 6 துணை கமிஷனர் மாவட்டங்களும் இவரது கட்டுரப்பாட்டில் இருக்கும்.
சென்னை தெற்கு கூடுதல் கமிஷனராக ராஜேஷ் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை நேற்றுதான் தென் மண்டல ஐஜி பதவியிலிருந்து மாற்றினார்கள். இவரது கட்டுப்பாட்டின் கீழ் தெற்கு மற்றும் மேற்கு இணை ஆணையரகங்களும், புளியந்தோப்பு, அண்ணாநகர், அம்பத்தூர், பரங்கிமலை, தி.நகர், அடையாறு ஆகிய துணை ஆணையரகங்களும் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications