எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட வயல்கள்... ஜெயந்தி நடராஜன் நேரில் ஆய்வு
நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட வயல்களை மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேரில் பார்த்து ஆய்வு நடத்தினார்.
கீழ்வேளூர் பகுதியில் உள்ள வயல்கள் மற்றும் வாய்க்கால்களில் எண்ணெய் கலந்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட 20 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும், வாய்க்கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து இங்கு ஜெயந்தி நடராஜன் இன்று வருகை தந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழ்வேளூர் காருகாகுடி பகுதியில் உள்ள நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பிறகு ஓஎன்ஜிசி அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது போன்ற பிரச்னை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க பெட்ரோலியத்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். மேலும், இது போன்ற எண்ணெய்க் கசிவுகளால் நீர்நிலைகளும் சுற்றுச் சூழலும் அதன் காரணத்தால் மக்களும் பாதிக்கப்பட நேரிடுகிறது.
ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications