லாரி விபத்து: உடைந்து ரோட்டில் ஆறாக ஓடிய 1 லட்சம் முட்டைகள்.. ஓடி, ஓடி அள்ளிய மக்கள்
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பனிமூட்டதால் லாரி விபத்துக்குள்ளானதி்ல் அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1,10,000 முட்டைகள் உடைந்து தெருவில் ஆறாக ஓடியது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் முட்டை வியாபாரி நந்தகுமார்(42).அவர் நேற்று நாமக்கல்லுக்கு சென்று அங்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1,10,000 முட்டைகளை வாங்கி அதை மினி லாரியில் ஏற்றி சென்னைக்கு கிளம்பினார். ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த டிரைவர் கண்ணன்(28) லாரியை ஓட்டினார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு லாரி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளையனூரில் சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டமாக இருந்ததால் சாலை சரிவரத் தெரியவில்லை. அந்நேரம் கார் ஒன்று லாரியை முந்த முயன்றபோது டிரைவர் லாரியை இடப்பக்கமாகத் திருப்பினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது மினி லாரி மோதியது. பனி மூட்டத்தால் ட்ரெய்லர் லாரி நின்றதை கண்ணன் கவனிக்கவில்லை.
இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த முட்டைகள் உடைந்து தெருவில் ஆறாக ஓடியது. இது குறித்து தகவல் அறிந்த பக்கத்து கிராமத்தினர் ஓடி வந்து முட்டை கூழ்களை பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர். விபத்தில் லாரி டிரைவர் கண்ணன், நந்தகுமார் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரி்த்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications