மீனாட்சி அம்மன் கோவில் அருகே வெடிகுண்டு புரளி.. மதுரையில் பீதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் உள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே வெடிகுண்டு இருப்பதாக பீதி பரவியதைத் தொடர்ந்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் குண்டு எதுவும் கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விளக்குத்தூண் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். இந்தத் தகவல் பரவியதால் மதுரை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளிதான், யாரும் பயப்படத் தேவையில்லை என்று போலீஸார் விளக்கினர்.

இதையடுத்து வெடிகுண்டு பீதி குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். புரளி கிளப்பிய நபர் குறித்து தற்போது போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+