இன்டிகோ விமானத்தில் பயங்கரம்... விமான ஊழியரைத் தாக்கி ரகளை செய்த பயணியால் பீதி
டெல்லி: மும்பை-டெல்லி இடையிலான இன்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் வன்முறையில் இறங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டு விட்டது.
புதன்கிழமையன்று, மும்பையிலிருந்து டெல்லிக்கு இந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்குக் கிளம்பியது. விமானம் வானில் பறக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆன நிலையி்ல 40 வயதான முர்சலின் ஷேக் என்ற திடீரென முரட்டுத்தனமாக நடக்க ஆரம்பித்தார். அனைவரையும் மிரட்டும் வகையில் அவர் பேசினார். இதையடுத்து விரைந்து வந்த விமான ஊழியர்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களை மீறி நடந்த அவர் காக்பிட்டுக்குள் நுழைய முயற்சித்தார்.
மேலும், காக்பிட் கதவை உடைக்கவும் முயன்றார். அதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் அவர் தாக்கினார். ஒரு ஏர் ஹோஸ்டஸ் கன்னத்தில் பளார் என அறைந்தார். மேலும் விமானத்தை தகர்த்து விடுவேன் என்றும் அவர் மிரட்டினார்.
இதையடுத்து பயணிகள் சிலர் எழுந்து வந்து விமான ஊழியர்களுடன் இணைந்து அந்த பயணியை தடுத்து நிறுத்தி அமர வைத்தனர்.
அந்த பயணி டென்ஷனில் இருந்ததாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் ஆயுதம் எதையும் வைத்திருந்ததாக தெரியவில்லை.
இந்த சண்டைக்காட்சியை ஒரு பயணி தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார். அதில் அந்த முரட்டுப் பயணி, விமான ஊழியர்களுடன் ஆக்ரோஷமாக மோதுவது பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை இன்டிகோ நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக காத்திருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் முரட்டுத்தனமாக நடந்த பயணியைக் கைது செய்து கொண்டு சென்றனர். அவர் மீது பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது, கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டது ஆகிய வழக்குகள் போடப்பட்டுள்ளன.
ஷேக் மும்பையைச் சேர்ந்தவர். அவரை டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications