ரிஷிவந்தியம் வெற்றியை எதிர்த்து வழக்கு: விஜயகாந்த் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சென்னை: ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த் தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ரிஷிவந்தியம் தொகுயில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றதை எதிர்த்து ஜெயந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எனது வேட்பு மனுவை ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்தது சட்ட விரோதம். எனவே அந்த தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி வெங்கட்ராமன் முன்பு நடந்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது விஜயகாந்த் 2 மனுக்களை தாக்கல் செய்தார். காலதாமதமாக மனுதாக்கல் செய்ததை ஏற்க வேண்டும் என்றும், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அதிகாரி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுக்களில் தெரிவித்திருந்தார்.
இதில் காலதாமதமாக மனுதாக்கல் செய்ததை ஏற்கக் கோரிய மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மற்றொரு மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்துக்கு எதிராக மனுதாரர் ஜெயந்தி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் என்றும், அது குறித்து இரு தரப்பினரும் தங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை வரையறுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications