சான்டி போன கையோடு அமெரி்க்காவைத் தாக்கிய ஏதேனா புயல்: 1,700 விமானங்கள் ரத்து
நியூயார்க்: சான்டி புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்ட சான்டி புயல் கடற்கரையோர நகரங்களை நிர்மூலமாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் நகரங்களுக்குள் புகுந்து தலைகீழாகப் புரட்டிப் போட்டதால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது.
ஏதேனாவால் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியில் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இந்த புது புயலால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன. அடுத்த 2 நாட்களில் ஏதேனாவால் கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும், நியூ இங்கிலாந்து பகுதியில் 6 முதல் 10 இன்ச் அளவுக்கு பனிபொழியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க், நியூஜெர்ஸி, கனக்டிகட், பென்சில்வேனியா மற்றும் மசாசுசட்ஸில் மழை மற்றும் பனி பொழிவால் 1,710 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே சான்டியால் பல வீடுகள் மின்சாரமின்றி இருக்கையில் ஏதேனாவால் கூடுதல் வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன. சான்டி புயல் தாக்கிய ஒரு வாரத்தில் வந்துள்ள ஏதேனாவால் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications