என் மகள்களை 'டேட்டிங்' கூப்பிட பசங்களுக்கு 'தில்' வேண்டும்: ஒபாமா

மகள்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்தபடி இருக்கும் பாசக்கார மற்றும் கண்டிப்பான தந்தை ஒபாமா. அதேசமயம், மகள்களை ஓவராக கட்டுப்படுத்தவும் மாட்டார். ஆனால், மகள்களுக்கு எது தேவையோ அது மட்டுமே கிடைக்கும்படி செய்வதிலும் கவனமாக இருப்பார். தேவையில்லாத கவனச் சிதறல்கள் தனது பிள்ளைகளுக்கு ஏற்படாத வகையில் ஒபாமாவும் சரி, அம்மா மிஷலும் சரி படு கவனமாக இருப்பார்கள்.
இந்த நிலையில், 2வது முறையாக அதிபராகியுள்ள ஒபாமா டேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது மகள்கள் டேட்டிங் போவார்களா என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்,எனது மகள்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். மலியா (14), சாஷா (11) இருவருமே வேகமாக வளர்ந்து விட்டனர். நம்பிக்கை அதிகம் கொண்ட பெண்களாக இவர்கள் உருமாறி வருகிறார்கள். டீன் ஏஜ் வயதைத் தொட்டுள்ள இவர்களைக் கவனிப்பதிலும் நான் கவனம் வைத்தாக வேண்டும். அந்தக் கவலை வேறு எனக்கு.
நிச்சயம் இளைஞர்கள் எனது மகள்களுடன் டேட்டிங் போக விரும்புவார்கள். ஆனால் வெள்ளை மாளிகையின் பலத்த பாதுகாவல் அனைவருக்கும் தெரிந்ததுதான். எனது மகள்களுடன் டேட்டிங் போக யாரேனும் விரும்பினால் இந்த காவலைத் தாண்டித்தான் வர வேண்டும். அது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு வேளை யாரேனும் இதையும் தாண்டி தைரியமாக வந்து விட்டால் நிச்சயம் அவர்கள் சொல்வதை காது கொடுத்து பொறுமையாக கேட்பேன்.
எனது மகள்கள் அருமையான இளம் பெண்களாக மாறி வருகின்றனர். அனைவரிடத்திலும் மரியாதையாக பழகுகின்றனர். தங்களையும் மற்றவர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.
எப்போதுமே நான் அவர்களுடன் இருக்க முடியவில்லை. எனது வேலை அப்படி. ஆனால் மிஷல் அப்படி இல்லை, அவர்களுக்காக நேரம் ஒதுக்குகிறார். கடைகளுக்குப் போகிறார்கள், படம் பார்க்கிறார்கள். பள்ளிக்கும் போகிறார்கள்.
2வது முறையாக அதிபராகப் பதவியேற்ற பின்னர் நடைபெறும் நடன நிகழ்ச்சியில் எந்தப் பாடலுக்கு நடனமாடுவது என்பதை நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. எனது மனைவியுடன் பேசிய பிறகுதான் அதை முடிவு செய்வேன். மனைவியைக் கேட்காமல் எதையும் செய்ய முடியாது. ஆனால் எதுவாக இருந்தாலும், நான் டான்ஸ் ஆடுவதற்கு வசதியான பாட்டைத்தான் தேர்வு செய்வேன். அதேசமயம் கொஞ்சம் ரொமான்ஸும் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்றார் சிரித்தபடி.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications