தென் மண்டல ஐ.ஜியாக அபய் குமார்-மானாமதுரை டிஎஸ்பியாக 'என்கவுண்டர்' வெள்ளத்துரை பொறுப்பேற்பு

Subscribe to Oneindia Tamil

Velladurai
மதுரை: தமிழகத்தின் தென் மண்டல ஐ.ஜியாக அபய் குமார் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதே போல மானாமதுரை டி.எஸ்.பியாக 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கூடங்குளம் விவகாரத்தை சரியாகக் கையாளதது, முல்லைப் பெரியார் போராட்டங்களை ஒடுக்கிய விதத்தில் மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்தது, இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் தலித்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, மருதுபாண்டியர் விழா, முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சிகளில் நடந்த கலவரங்கள், கொலைகள் ஆகியவை காரணமாக தென் மண்டல ஐ.ஜியாக இருந்த ராஜேஷ் தாஸ் இடம் மாற்றப்பட்டார்.

அவருக்கு டப்பா பதவி ஏதாவது தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் துறையின் தென் மண்டல கூடுதல் ஆணையராகப் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம், அவருக்கு மேலிடத்தில் உள்ள செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பது தெளிவாகிறது.

இந் நிலையில், சென்னை மாநகரக் காவல்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த அபய் குமார் சிங், தென் மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மானாமதுரை டிஎஸ்பியாக 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை:

அதே போல மானாமதுரை டி.எஸ்.பியாக 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

வீரப்பன் எண்கெளன்டர், தாதா வீரமணி எண்கெளன்டரில் முக்கிய பங்கு வகித்தவர் இவர் ஆவார்.

மருதுபாண்டியர் குருபூஜையின்போது திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் குத்திக் கொலை செய்யப்பட்டது, தேவர் குருபூஜையின்போது மானாமதுரை பகுதிகளில் நடந்த மோதல்களையடுத்து அந்தப் பகுதி காவல் துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சிவகங்கை கூடுதல் எஸ்பி கண்ணன் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டு, மதுரை கூடுதல் எஸ்பி சக்திவேல் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார்.

அதே போல மதுரை அண்ணா நகர் உதவி கமிஷனராக இருந்த வெள்ளத்துரை மானாமதுரை டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று மானாமதுரை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பற்றதும் மானாமதுரை போலீஸ் கோட்ட பகுதிகளில் உடனடி ஆய்வும் நடத்தினார் வெள்ளைத்துரை.

கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவை மிக அமைதியாக நடத்திக் காட்டியதற்காக அப்போதைய மதுரை கமிஷ்னர் கண்ணப்பனால் பாராட்டப்பட்ட அதிகாரிகளில் வெள்ளைத்துரையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+