விஜயகாந்த்திடம் 'சிக்காமல்' எப்படித் தப்பிக்கலாம்..? சில ஐடியாக்கள்!
சென்னை: 'கேப்டன்' விஜயகாந்த் என்றாலே தேமுதிகவினர் மட்டுமல்ல மீடியா துறையினருக்கும் திட்டும், அடியும்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு அடிதடியில் அமர்க்களப்படுத்துகிறார் - சினிமாவை விட இப்போது அவர் அரசியலில் கொடுக்கும் பன்ச்தான் படா களேபரமாக இருக்கிறது, தத்ரூபமாக இருக்கிறது.

துண்டை எடுத்து தோளில் போட்டா
சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்த்துக்கு ஒரு வசனம் வைத்திருப்பார்கள். துண்டை எடுத்து தோளில் போட்டால் தீர்ப்பு சொல்லப்போறார்னு. தனியாக எடுத்து வைத்தால் பட்டையை கிளப்ப போறார்னு அர்த்தம் என்று சொல்வார்கள். அதே மாதிரிதான் 'கேப்டனிடம்' இருந்து அழைப்பு வந்தாலே கட்சிக்காரர்களுக்கு நடுக்கம்தானாம்.

மணிக்கு மணி ஒரு ட்ரீட்மென்ட்
5 மணிக்கு மேல வரச்சொன்னால் ஒரு ட்ரீட்மெண்ட். 8 மணிக்கு மேல் வரச் சொன்னால் வேற ட்ரீட்மெண்ட் என்கின்றனர் தேமுதிகவினர். இதற்கு பயந்தே சிலர் கட்சியை விட்டு எஸ்கேப் ஆன கதையும் உண்டு.

'பன்ச்'சுக்குப் பயந்து ஓடிய நண்பர்
இதய நோயாளியான அவர் இப்போது எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். விஜயகாந்தின் பால்ய காலத்து நண்பரான அவரையே விஜயகாந்த் அடிதடியில் தள்ளிவிட்டு கீழே விழ வைத்தாராம். இனியும் தாங்காது என்றுதான் எஸ்கேப் ஆனதாக கூறுகின்றனர்

'நறுக்'கென்று நாலு வார்த்தை
விஜயகாந்திடம் திட்டு வாங்கமல் தப்பியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சில மாதங்களுக்கு முன் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு தாமதமாக வந்தவர்களை நிற்க வைத்து கண்டபடி பேசி விளாசி விட்டாராம் தலைவர்.

'ஆல் டைம் அட்டாக்'
சினிமா சூட்டிங்கில் தீவிரவாதிகளை உதைத்து, எதிரிகளை பந்தாடுவது விஜயகாந்த் ஸ்டைல். இப்போது அரசியல்வாதி ஆனபின் கையில் சிக்குபவர்களை எல்லாம் 'அட்டாக்' செய்து அலறடிக்கிறார் பல 'அட்டாக்'குகளை நேரில் பார்த்து பயந்து போன நெருக்கமானவர்கள்.

இதுகெல்லாமா அடிப்பாங்க
கேப்டன் டிவியில் அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தை ஒளிபரப்பியதால் டென்ஷன் ஆகி, சம்பந்தப்பட்டவர்களுக்கு பன்ச் கொடுத்து விட்டாராம் தலைவர்.

எண்ணெய் தேய்ச்சுட்டு போங்க
கோபமடைந்தால் யாராக இருந்தாலும் தலையில் குட்டு வைத்து விடுவார் விஜயகாந்த் என்று அவரிடம் குட்டு வாங்கியவர்கள் தலையைத் தடவியபடி கூறுகிறார்கள். அடுத்தவாட்டி போகும்போது, தலையில் வழிய வழிய எண்ணெய் வைத்துக்கொண்டு போனால் அப்புறம் எப்படி கை வைக்க முடியும், வழுக்கிடாது...?

தீபாவளிக்கு என்ன படம் கேப்டன்?
விஜயகாந்த்திடம் சூடான அரசியல் செய்திகளைக் கேட்பதற்குப் பதில் கேப்டன் டிவியில் இந்த வாரம் என்ன படம் போடுவார்கள், தீபாவளிக்கு என்ன படம் போடுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக கேட்டால் அவர் கோபப்பட மாட்டார் என்று நக்கலாக பேசுகிறார்களாம் பத்திரிக்கையாளர்கள் மட்டத்தில்.












Click it and Unblock the Notifications