திமுக-காங் இடையே பிரச்னையை உருவாக்கும் வகையில் எனது கருத்து திரிப்பு: நாராயணசாமி 'பல்டி'

சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த நாராயணசாமி, கூடங்குளம் அணு உலைக்கு முன்பு ஆதரவளித்து வந்த திமுக தற்போது பின்வாங்கி விட்டதாகவும், தற்போதும் அதிமுகவே ஆதரவளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திமுக எதிர்ப்பதைப் போலவும், ஜெயலலிதா ஆதரிப்பதைப் போலவும் பேட்டி கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஒன்று! கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு, அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் தெளிவுபடுத்திய பிறகுதான், பணிகளைத் தொடர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்கு அனுப்பி வைத்தவர் ஜெயலலிதா. கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் ஜெயலலிதா.
இவையெல்லாம் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியாமலே போய்விட்டதா?.
நாட்டு மக்களுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக சொல்கிறேன். என்றைக்கும் கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. விஞ்ஞான ரீதியாக தமிழகத்தில் தொழில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தான் நாங்கள் என்று கருணாநிதி கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று மீண்டும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி,
திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிரச்னையை உருவாக்கும் வகையில் எனது கருத்து திரித்துக் கூறப்பட்டுவிட்டது.
கூடங்குளம் அணு உலைக்கு திமுக எப்போதுமே ஆதரவு அளித்து வருவதாகவே நான் பேட்டியில் கூறியிருந்தேன் என்று 'அந்தர் பல்டி' அடித்துள்ளார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications