நாங்குநேரி அருகே 650 கிலோ வெடி பொருட்களுடன் கார் பறிமுதல்: தப்பி ஓடியவர்கள் யார்?
நாங்குநேரி: நாங்குநேரி அருகே 650 கிலோ வெடி பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள டோல்கேட் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெயா பிரின்ஸ், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 4 வழிச் சாலையில் மதுரையில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வேகமாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட ஒரு காரை போலீசார் சோதனை போடுவதற்காக மறித்தனர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் ஜீப்பில் காரை விரட்டி சென்றனர்.
அப்போது அந்த கார் அருகில் உள்ள பாலத்தில் மோதிய நிலையில் கிடந்தது. காரில் வந்தவர்கள் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து போலீசார் காரை சோதனையிட்டபோது அதில் 13 மூட்டைகளில் அமோனியம் நைட்ரேட்' வெடி மருந்து இருந்தது.
பெரும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்த வெடி பொருட்களை கடத்தி சென்றது தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த காரின் எண் போலியானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவகாசியில் இருந்து இந்த வெடி மருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications