'பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே' புத்தகத்தில் உள்ளது போல ரொமான்ஸ் செய்ய மறுத்த கணவர்.. பிரிந்த மனைவி!

ஜேம்ஸ் என்ற பெண் நூலாசிரியர் எழுதிய போர்ன் நூலான பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே என்ற நூல் இங்கிலாந்துப் பெண்களை மயக்கிப் போட்டு விட்டது. அந்தப் புத்தகம் வெளியானதற்குப் பின்னர் இங்கிலாந்தில் செக்ஸ் வாழ்க்கை முன்பை விட அதிக அளவில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளதாகவும், குழந்தை பெற்றுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், செக்ஸ் நடவடிக்கைளில் புதிய வீச்சு கிளம்பியிருப்பதாகவும் சர்வேக்கள் கூறின. அந்த அளவுக்கு அந்த நூல் செக்ஸூவலாக பெண்களை தட்டி எழுப்பியது.
இந்தநிலையில் இந்த நூலால் தற்போது ஒரு விவாகரத்தும் நடந்துள்ளது. பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நூலில் உள்ளதைப் போன்ற ரொமான்டிக் விளையாட்டுக்களில் ஈடுபட கணவர் மறுத்ததால் அவரை விவாகரத்தே செய்து விட்டாராம் மனைவி.
அந்த பெண் இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவார். 41 வயதான அவர் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நூலைப் படித்தது முதல் அதே போல செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தனது கணவரைப் போட்டு நச்சரித்து வந்தாராம். ஆனால் அவரது கணவரோ அதற்கெல்லாம் நான் ஆள் இல்லை என்று கூறி மறுத்து வந்தாராம். பார்த்தார் மனைவி இப்போது விவகாரத்து கேட்டு விட்டார்.
தான் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவலில் உள்ளதைப் போல ஈடுபட தனது கணவர் மறுப்பதாக கூறியுள்ளார் அந்தப் பெண்.
மேலும் அவர் கூறுகையில், எனது கணவருக்கு செக்ஸ் என்றாலே பிடிக்கவில்லை. படு போரான ஆசாமியாக இருக்கிறார். சரி இந்தப் புத்தகத்தில் உள்ளதைப் போலவாவது நடங்களேன் என்று கூறியும் கூட அதற்கும் அவர் மறுக்கிறார். இப்படிப்பட்டவருடன் நான் எப்படி வாழ முடியும் என்று கூறியுள்ளாராம்.
தனது கணவரை வழிக்குக் கொண்டு வர இந்தப் பெண் பல முயற்சிகளைச் செய்து பார்த்தாராம். செக்ஸியான பாண்டீஸ் அணிந்து கணவர் முன்பு நின்று பார்த்தாராம். ஆனால் அவர் கணவர் கண்டு கொள்ளவே இல்லையாம். இதனால்தான் வெறுத்துப் போய் விவாகரத்துக்கு வந்து விட்டார்.
பிப்டி ஷேட்ஸ் ஆப் லைப் புத்தகத்தால் ஒரு விவாகரத்து நடப்பது இங்கிலாந்தில் இதுவே முதல் முறையாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications