ஆங்கிலப் பேயை ஓட்டுவது அவசியம்: ம.பி. முதல்வர் பரபரப்பு பேச்சு
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆங்கில மொழிக்கு எதிராக பரபரப்பாக பேசியுள்ளார்.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
மிகக் குறைவான அளவு மக்களே ஆங்கில மொழியில் பேசினாலும் அவர்கள் ஆங்கிலம் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்பது போன்று காட்டிக் கொள்கிறார்கள். ஆங்கிலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஆங்கிலம் பேசும் மக்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் அவ்வாறு ஆங்கிலத்தை நீக்கினால் கிராமங்களில் இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆங்கிலப் பேயை ஓட்டுவது மிகவும் அவசியம் என்றார்.












Click it and Unblock the Notifications