குழந்தைகள் தின 'கூகுள் டூடுல்' போட்டி: சண்டிகர் மாணவர் வெற்றி

உலக அளவில் பிரபலமான தலைவர்களின் பிறந்தநாள், வரலாற்று நாயகர்களின் பிறந்த நாள் மற்றும் சிறப்பு தினங்கள் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் கூகுள் தனது வலைப்பக்கத்தில் சிறப்பிக்கும். கண்ணைக் கவரும் அம்சங்கள் கொண்ட அந்தப் பக்கங்களே கூகுள் டூடுல் எனப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய மாணவர்களுக்கு கூகுள் இந்தியா டூடுல் ஃபார் கூகுள் போட்டிக்காக ‘வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தலைப்பில் போட்டியை அறிவித்தது.
இந்தப் போட்டியில் இந்தியா முழுவதும் 60 நகரங்களைச் சேர்ந்த 2,00,000 சிறுவர், சிறுமிகள் தங்கள் கற்பனையில் டூடுல்களை வரைந்து அனுப்பினர். டெல்லியில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் திங்கட்கிழமை வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில், சண்டிகரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அருண் குமாரின் டூடுல், குழந்தைகள் தினத்தன்று கூகுள் இந்தியாவில் வெளியிட தேர்ந்தெடுக்கப்பட்டது. கால்பந்து வீரர், கதகளி நடனக் கலைஞர், மயில், விவசாயி மற்றும் பூக்களைக் கொண்டு கூகுள் டூடுலை அவர் கண்ணைக்கவரும் வகையில் அவர் உருவாக்கியுள்ளார். அந்த டூடுல்தான் இன்றைய தினம் கூகுளின் முகப்புப் பக்கத்தை அலங்கரிக்கிறது.
இந்தப் போட்டியில் கோழிக்கோடைச் சேர்ந்த வாசுதேவன் தீபக், பெங்களூரைச் சேர்ந்த ஷ்ர்வயா மற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ப்ரீத்தம் பால் ஆகிய மூன்று மாணவர்களும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பிரபல கார்ட்டூனிஸ்ட் அஜித் நினான் மற்றும் நடிகர் போமன் ஹிரானி ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளாக கூகுள் டூடுல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications