பிங்கி ஆண்தான், ஆனால் 'ரேப்' பண்ண முடியாது-டாக்டர்கள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிங்கி. இவர் டோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.
ஆனால் இவர் மீது ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தானும் பிங்கியும் சில வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், பிங்கி ஒரு ஆண் என்றும், தன்னை அவர் பலாத்காரம் செய்து விட்டு மோசடி செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பிங்கி கைது செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
இந்த மருத்துவ ஆய்வில் பிங்கி ஆண் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிங்கி மீது போலீஸார் கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பிங்கி குறித்து மருத்துவ நிபுணர்கள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதற்கு அந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதையே அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.
பிங்கி ஆணாக இருந்தாலும் கூட அவருக்கு Disorder of Sexual Development (DSD) என்ற கோளாறு உள்ளது. அதாவது பாலின ரீதியாக பிங்கி ஆண்தான். ஆனால் ஒரு ஆணுக்குரிய, பாலின உறுப்புகள் அவருக்கு வளரவில்லை. அது ஆரம்ப கட்டத்தோடு நின்று விட்டது. எனவே பாலின ரீதியாக பிங்கி ஆணாக இருந்தாலும் கூட அவரால் ஒரு ஆண் செய்யக்கூடிய செக்ஸ் நடவடிக்கை (Penetrative sex) எதையும் மேற்கொள்ள இயலாது. அதாவது ஒரு ஆண் எப்படிப்பட்ட செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுவானோ அதை பிங்கியால் செய்ய முடியாது.
எந்த ஒரு பெண்ணுடனும் இயல்பான உடல் உறவில் பிங்கியால் ஈடுபட முடியாது. அப்படி இருக்கும்போது அவரால் எப்படி பலாத்காரம் போன்றவற்றில் ஈடுபட முடியும் என்று தெரியவில்லை என்று இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் டிஎஸ்டி பிரச்சினை உள்ளவர்களால் ஆக்கப்பூர்வமான செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களை ஆணாகவும் கருத முடியாது என்றும் டாக்டர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் கெளதம் கஸ்தகீர் கூறுகையில், பிங்கிக்கு விதைப்பை எதுவும் வளரவில்லை. அதேசமயம், அவரிடம் பெண்ணுறுப்போ அல்லது கர்ப்பப் பையோ கிடையாது. எனவே இவர் ஒரு ஆணின் அடிப்படை அம்சங்களுடன் இருப்பவராக கருத முடிந்தாலும் கூட இவரை ஆண் என்று சொல்ல முடியாது. அவரது உடலில் ஆண் ஹார்மோன்களும், குரோமோசோமும் இருந்தாலும் கூட அவரை ஆண் என்று சொல்ல முடியாது. அதேசமயம், பெண் என்றும் சொல்ல முடியாது. இது ஒரு விசித்திரமான பிரச்சினை. முற்றிலும் மருத்துவ பிரச்சினையாகும் என்றார்.
ஆனால் போலீஸ் தரப்பிலோ, பிங்கியின் ரத்த ஓட்டத்தை வைத்துப் பார்க்கும்போது அவரை பெண் என்று சொல்ல முடியவில்லை என்று கூறுகிறார்கள். மேலும் அவருக்கு உறுப்பு எழுச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள். மேலும் ஒரு ஆண் எப்படிப்பட்ட செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுவானோ அதே போல பிங்கியாலும் செயல்பட முடியும் என்றும் அடித்துக் கூறுகிறார்கள்.
டாக்டர்கள் சொல்வதை நம்புவதா அல்லது போலீஸார் சொல்வதை நம்புவதா என்று தெரியவில்லை.
போலீஸாரின் செயல்கள் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.. பிங்கி
இதற்கிடையே போலீஸார் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும்போது தனக்கு எதிராக பெரும் சதி நடப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றும், அவர்கள் தன்னை தற்கொலையை நோக்கி தள்ளிக் கொண்டிருப்பதாகவும் பிங்கி குமுறியுள்ளார்.
இதுகுறித்து பிங்கி கூறுகையில், என்னால் கற்பழிப்பு போன்றவற்றில் ஈடுபட முடியாது என்று மருத்துவ அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் என்னால் கற்பழிக்க முடியும் என்று கூறி வருகின்றனர். மருத்துவ அறிக்கை நகலையும் என்னிடம் தர மறுக்கிறார்கள்.
எனக்கு எதிராக போலீஸார் பெரும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். என்னை தற்கொலை முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளி வருகி்ன்றனர் என்று கூறியுள்ளார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications