பனி வந்துருச்சே, இனி மழை வராதா, அவ்ளோதானா?.. பெரும் கவலையில் மக்கள்!

தற்போது வட கிழக்குப் பருவ மழைக் காலம் நடந்து வருகிறது. ஆனால் நடப்பதைப் பார்த்தால் அப்படி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. காரணம், அந்த அளவுக்கு தமிழகம் வறண்டு போய் வருகிறது.
இந்த முறை பருவ மழைக் காலம் தொடங்கிய சில நாட்கள் வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. ஒரு முறை நல்ல பலத்த மழையும் பெய்தது. ஒரு புயலும் கூட வந்து போய் விட்டது. ஆனால் புயலால் பெருமளவில் நமக்கு மழை கிடைக்கவில்லை என்பதே உண்மை. குறிப்பாக சென்னைக்கு பெரிய அளவில் புயலால் மழை கிடைக்கவில்லை.
இருப்பினும் பல பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதலான மழை கிடைத்துள்ளதாக வானிலை மையம் கூறுகிறது. அதேசமயம் தற்போது பெய்துள்ள மழை ஒட்டுமொத்தமாக போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம்.
லேட்டஸ்ட் வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் எங்குமே நேற்றும் சரி, இன்றும் சரி மழை பெய்யவில்லை. கேரளாவில் மட்டும் இரண்டு இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.
வரும் 16ம் தேதி வரையிலான வானிலை முன்னெச்சரிக்கை என்னவென்றால், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் பரவலாக, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்பதே. ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் வானிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் தற்போது பல இடங்களில் பனி கொட்டத் தொடங்கியுள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் பனி கொட்டுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே பகலிலும் கூட இதமான வெப்பநிலையே காணப்படுகிறது. அதேசமயம், பகல் பொழுதில் நல்ல வெயிலும் அடிக்கிறது.
பனி பெய்யத் தொடங்கினால் மழை பெய்யாது என்பார்கள். எனவே பனி பெய்யத் தொடங்கியிருப்பதால் இனி மழை வராதோ என்ற ஏமாற்றத்தில் மக்கள் உள்ளனர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications