சிவ சேனா தலைவர் பால் தாக்கரே உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மும்பையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

Bal Thackeray
சிவசேனா தலைவர் பால் தாக்கரே உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வயது 86.

சிவ சேனா தலைவர் பால் தாக்கரே கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்ப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர் பந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். தான் நலமாக இருப்பதாக அவர் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல் நிலை மோசமானது.

இதையடுத்து லீலாவதி மருத்துவமனை மருத்துவர்கள் தாக்கரேவின் வீட்டுக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஏராளமான சிவ சேனா தொண்டர்கள் தாக்கரேவின் வீட்டுக்கு முன்பு குவிந்துவிட்டனர். அவரது நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் தனது தந்தையின் உடல் நிலை தேறும் என்று தான் நம்புவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் நேரம் ஆக ஆக தாக்கரேவின் வீட்டுக்கு முன்பு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்கரேவின் வீட்டுக்கு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+