இந்தியாவுக்கேற்ற சரியான தலைவர் நரேந்திர மோடிதான்... சர்வே
டெல்லி: இந்தியாவை வழி நடத்தவும், இந்தியாவுக்குப் பொருத்தமான தலைவரும் நரேந்திர மோடிதான் என்று சிஎன்என்-ஐபிஎன் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிலை குறித்து அவநம்பிக்கை
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பலரும் இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து அவநம்பிக்கையும், அதிருப்தியும், ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர். 60 சதவீத நகர்ப்புற இந்தியர்கள், தங்களது வேலையும், வருமானமும் பாதுகாப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அரசு நடவடிக்கை சரியில்லை
பொருளாதார நெருக்கடியை சமாளித்து சரி செய்ய அரசுத் தரப்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று 55 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

சீர்திருத்தங்கள் .. தவறி விட்டார் பிரதமர்
தான் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்கத் தவறி விட்டதாக பலர் கூறியுள்ளனர்.

ஊழல்களுக்கு அரசியல்வாதிகளே காரணம்
நாட்டை உலுக்கி வரும் ஊழல் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற இந்தியர்களின் ஏகோபித்த தலைவர் மோடி
நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நரேந்திர மோடிக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. இந்தியாவின் தலைமைப் பொறுப்புக்கு அதாவது பிரதமர் பதவிக்கு அவரே பொருத்தமானவர் என்றும், அவர்தான் நாட்டை வழி நடத்திச் செல்ல சரியான தலைவர் என்றும் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். அவருக்கு 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்மோகனுக்கு 2வது இடம்.. சோனியாவுக்கு 3
சிறந்த தலைவர் வரிசையில் மன்மோகன் சிங்குக்கு 2வது இடமும், சோனியா காந்திக்கு 3வது இடமும் கிடைத்துள்ளன. நான்காவது இடம் ராகுல் காந்திக்கு. 5வது இடம் நிதீஷ் குமாருக்கு.

கட்சின்னா அது காங்கிரஸ்தான்
அதேசமயம், தற்போதுள்ள நிலையில் நாட்டை வழி நடத்திச் செல்ல எந்தக் கட்சி பொருத்தமானது என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கே 32 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 28 சதவீதம் பேரின் ஆதரவுதான் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது.

அன்னாவுக்கு 65...கேஜ்ரிவாலுக்கு ஜஸ்ட் 12
ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற கேள்விக்கு அன்னா ஹஸாரே என்று 65 சதவீதம் பேர் ஓ போட்டுள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வெறும் 12 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. பாபா ராம்தேவுக்கு 5 சதவீத ஆதரவுதான்.

எது உங்களை மோசமாக பாதிக்கிறது?
உணவுப் பொருள் விலையேற்றமே என்று 63 சதவீதம் பேரும், எரிபொருள் விலை உயர்வு என்று 23 சதவீதம் பேரும், வாடகை உயர்வு என்று 7 சதவீதம் பேரும், தங்க விலையை 7 சதவீதம் பேரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications