என்னை மாதிரி அழகா இருந்தாலே பிரச்சனை தான்: சுனந்தா புஷ்கர் தரூர்

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தரூர் ரூ.500 கோடி மதிப்புள்ள கேர்ள் பிரண்ட் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்திருந்தனர். அதற்கு என் மனைவி எனக்கு விலை மதிப்பற்றவர் என்று தரூர் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து சுனந்தா பத்திரிக்கை ஒன்று அளித்த பேட்டி வருமாறு,
நரேந்திர மோடி உங்களைப் பற்றி கூறியுள்ளது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூட்டத்தில் சிக்கியது, அரசியல்வாதியின் மனைவி என்பதால் இப்படி நடக்கிறதா?
நான் அப்படி நினைக்கவில்லை. சில வகை ஆண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தவறாக நடப்பார்கள். அவர்களுக்கு அரசியல்வாதியின் மனைவியோ, வேறு யாரோ என்பதெல்லாம் கணக்கில் கிடையாது. சில ஆண்கள் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன்.
சசி தரூரை காதல் விவகாரத்துறை அமைச்சராக்கியிருக்க வேண்டும் என்று முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளாரே?
இது ஒருவரை சிறுமைப்படுத்துவதாகும் என்று நான் நினைக்கிறேன்.
சசி தரூர் தற்போது மீண்டும் அமைச்சராகிவிட்டார். ஆனால் கடந்த 2010ம் ஆண்டு ஐபிஎல் சர்ச்சையால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததில் உங்கள் பெயர் அடிபட்டதே. அதனால் உங்களுக்கு ஏதாவது குற்ற உணர்ச்சி ஏற்பட்டதா?
நான் எந்த தவறும் செய்யாததால் எனக்கு குற்ற உணர்வு ஏற்படவில்லை. ஐபிஎல் வியாபாரத்தில் எனக்கு ஆர்வமில்லை. கொச்சி அணியை ஏலத்தில் எடுக்க முயன்ற நிறுவனத்திற்கு நான் உதவ முயன்றேன். அவ்வளவு தான். இந்த விவகாரத்தில் பல பொய்யான தகவல்கள் வெளியாகின. அரசியல் சர்ச்சைகளில் என்னை தொடர்புபடுத்தியது சசியை வருத்தமடைய வைத்தது.
ஆனால் நீங்கள் என்ன வியாபாரம் செய்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லையே
நான் துபாயில் ரியல் எஸ்டேட் ஆலோசனை வழங்கும் கம்பெனி வைத்துள்ளேன். என்னை கவனித்துக்கொள்ள போதுமான அளவுக்கு பணம் சம்பாத்துள்ளேன். பெண்கள் பணத்திற்கு ஆண்களை சார்ந்திருக்கக் கூடாது என்று நம்புபவள் நான். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்கவில்லை. நான் எனது சகோதரரின் கல்விக்கு செலவளித்தேன். கடந்த 1989ம் ஆண்டில் இருந்து எனது குடும்பத்தை கவனித்து வருகிறேன்.
அழகான பெண்களின் செயல்பாடுகளுக்கு இந்தியாவில் முக்கியத்துவம் இல்லை என்று நினைக்கிறீர்களா?
உலகில் எங்கு சென்றாலும் அழகான பெண்களின் வாழ்க்கை கடினம் தான். மக்கள் தாங்களாக ஒன்றை நினைத்துக் கொண்டு நான் அடிக்கடி பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒரு பெண் அறிவாளியாக இருந்தால் அவர் பெரிய கண்ணாடி அணிந்திருக்க வேண்டும், லிப் கிளாஸ் போட்டிருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். என் தோழிகள் வீட்டுக்கு வந்தால் ஓ, உன் வீட்டில் கோயில் உள்ளது. உனக்கு கடவுள் பக்தி உள்ளதா, நீயாகவே சமைக்கிறாயா என்று கேட்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications