தோசை சுட்டுத் தர மறுத்த நிறை மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்
சென்னை: சென்னையில் தோசை சுட்டுத் தர மறுத்த நிறை மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சீனி(25). அவருக்கும் கீதா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கீதா தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சீனி சென்னை மேடவாக்கம் வடக்கு பட்டு சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த சீனி தனக்கு தோசை சுட்டுக் கொடுக்குமாறு மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் கீதா தோசை சுட்டுக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சீனி தனது மனைவியை கழுத்தை நெரித்துள்ளார். இதில் கீதா மயங்கி விழுந்துள்ளார். அதைப் பார்த்த அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
மயங்கிய கீதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சீனியை தேடி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications