மாபெரும் வெற்றிக்கு பிறகு ஒபாமாவின் தீபாவளி வாழ்த்து
வாஷிங்டன்(யு.எஸ்): 2009 ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடி இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த அதிபர் ஒபாமா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வெள்ளை மாளிகையிலிருந்து, அதிபர் ஒபாமா வீடியோ வடிவில் வாழ்த்துச் செய்தி அளித்துள்ளர். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
'அமெரிக்க மக்களின் சார்பாக, உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தீபாவளி என்பது கெட்டவற்றை அழித்து நல்லவர்களை வாழவைக்கும் அடையாளமான தீப ஒளி விளக்குகளின் திருவிழா. இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் அடையாளம்.
இந்து சமயத்தில் தீபாவளி , ராமர் வனவாசத்திலிருந்து திரும்பி வந்த நாளின் அடையாளமாக கருதப்படுகிறது. ஜெயின் சமயத்தில் , மகாவீர் இறைநிலையை அடைந்த நாளாக கருதப்படுகிறது. சீக்கிய சமயத்தில் தீபாவளி விடுதலையின் அடையாளமாக குரு ஹர்கோபிந்தால் அடையாளம் காட்டப்பட்டது.
இது மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டிய தருணம். இந்த நேரத்தில் நம்மைவிட வசதி குறைவானவர்கள், சுதந்திரம், பேச்சுரிமை இல்லாதவர்களை நினைவு கொள்ளவேண்டும். அவர்களுக்காக நாம் இன்று மட்டுமல்ல எப்போது இணைந்து செயல்படவேண்டும். இந்த தருணத்தில் நாம் அரசியல் பாகுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு அவர்களுக்காக உதவி செய்ய உறுதி காண்போம்.
எங்கள் மனதில் நீங்கள் அனைவரும் இருப்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் நானும், மிஷலும் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்' என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்டம்
இந்த ஆண்டு நடந்த வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்டத்தில் துணை அதிபர் பைடன் கலந்து கொண்டார்.
வாஷிங்டன் இந்து கோவில் பூஜாரி சால்வை அணிவிக்க, துணை அதிபர் பைடன் தீப ஒளியை ஏற்றி வைத்தார். பைடனின் வாழ்த்துச் செய்தியிலும் வசதி குறைவானவர்களுக்கு உதவுவதற்கு உறுதி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் அமெரிக்காவின் இந்திய தூதர் நிருபமா ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் ஏராளமான இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள், ஒபாமா அமைச்சரவையின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ்மேன்கள், தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒபாமா பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் தொடர்ந்து நடைபெறும் நான்காவது தீபாவளி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications