தமிழகத்துக்கு 4.8 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவு
டெல்லி: தமிழ்நாட்டுக்கு இன்று முதல் வரும் 30-ந் தேதி வரை 4.8 டி.எம்.சி. நீர் வழங்க கர்நாடகத்துக்கு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறை செயலருமான துருவ் விஜய் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, தமிழகத்துக்கு நவம்பர் 16-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை 8 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்; தமிழகத்தில் சம்பா பயிர்களின் பாசனத்துக்காகக் கர்நாடகம் வழங்க வேண்டிய 52.5 டிஎம்சி தண்ணீரையும் உடனடியாக வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார். ஆனால் கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை கர்நாடகம் வழங்கி விட்டது என்றார்.
இரு மாநில வாதத்தைக் கேட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவர் துருவ் விஜய் சிங் பிறப்பித்த உத்தரவில் வறட்சிக் கால நீர்ப் பங்கீட்டு முறைப்படி இன்று முதல் 30-ந் தேதி வரை தமிழகத்துக்கு 4.8 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications