போர்க்களமாகிப் போன பழைய ஹைதராபாத்- 144 தடை உத்தரவு பிறப்பு- பதற்றம் நீடிப்பு

Subscribe to Oneindia Tamil

Hyderabad
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் பழைய ஹைதராபாத்தில் சார்மினார் அருகே இருக்கும் பாக்கியலட்சுமி கோயிலை விரிவுபடுத்தும் விவகாரம் பெரும் வன்முறையை உருவாக்கிவிட்டது. பழைய ஹைதராபாத் நகரமே நேற்று போர்க்களமாகிப் போனது. தற்போதும் அங்கு பதற்றம் நீடித்து வருகிரது.

பழைய ஹைதராபாத்தில் வரலாற்று சின்னமான சார்மினார் அருகே பாக்கியலட்சுமி கோயில் இருக்கிறது. இதை விரிவுபடுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போக கோயிலை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அங்கு மசூதியிலிருந்து வெளியே வந்த ஒரு குழுவினர் காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் இடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் மூண்டது. போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மோதலில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசார் பலர் படுகாயமடைந்தனர். இதனால் பழைய ஹைதராபாத் நகரமே போர்க்களமாக காட்சி அளித்தது.

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 40 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். வன்முறைகள் முடிவுக்கு வந்தாலும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+