அசாமில் மீண்டும் இன மோதல் - பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
கோக்ராஜர்: அசாம் மாநிலத்தின் போடோலாந்து பகுதியில் மீண்டும் இன மோதல் வெடித்திருக்கிறது. நேற்று முன் தினம் தொடங்கிய இம்மோதல் இதுவரை 11 பேரை பலி வாங்கியிருக்கிறது.
அசாமின் போடோலாந்து தன்னாட்சிப் பிரதேச மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கும் போடோ இனமக்களுக்கும் இடையே அண்மையில் பெரும் மோதல் வெடித்தது. இதில் 78 பேர் பலியாகினர். சுமார் 4 லட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ நேரிட்டது. இதனால் ராணுவம் அப்பகுதியில் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அப்பகுதியில் மோதல் வெடித்திருக்கிறது. இம்மோதலில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ராணுவம் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. போடோலாந்து பகுதியில் தங்கு தடையின்றி ஆயுத புழக்கம் இருப்பதே மோதலுக்கு காரணம் என்பதால் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போரை கண்டுபிடித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இம்மோதலால் கோக்ராஜர் மாவட்டத்தில் காலரவையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications