பால்தாக்கரே மறைவு... பாஜகவினருக்கான விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார் பிரதமர் மன்மோகன்சிங்

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு கடந்த வாரம் பிரதமர் மன்மோகன்சிங் விருந்து கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளான திமுக, முஸ்லிம் லீக் போன்றவற்றுக்கு நேற்று பிரதமர் விருந்து கொடுத்தார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பது பற்றி 'சஸ்பென்ஸ்' யுக்தியை கடைபிடிப்பதாக அறிவித்திருக்கும் திமுக சார்பில் டி.ஆர்.பாலு இந்த விருந்தில் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.ஆர். பாலு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும்போது திமுகவின் நிலையைத் தெளிவுபடுத்துவோம் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும் பிரதமர் இன்று இரவு விருந்து அளிக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானதைத் தொடர்ந்து இந்த விருந்து நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன்சிங் ரத்து செய்திருக்கிறார். இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜும் பிரதமர் மன்மோகன்சிங்குடன் போனில் பேசினார். இதைத் தொடர்ந்து விருந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications