நைஸ் விரைவுச்சாலை ஊழல் வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்வர்கள் 3 பேர் மீது வழக்கு

பெங்களூர்-மைசூர் இடையே 100 கிமீ தூரத்திற்கு விரைவு நெடுஞ்சாலை
அமைக்க ஒப்பந்தப்புள்ளி பெற்ற நந்தி இன்ப்ராஸ்ட்ரக்சர் காரிடர் என்டர்பிரைசஸ்(நைஸ்) நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.ஜே. ஆபிரகாம் என்பவர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி லோக்ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் விரைவு நெடுஞ்சாலை அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர்கள் ஹெச்.டி. தேவே கௌடா, எதியூரப்பா மற்றும் எஸ்.எம். கிருஷ்ணா, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வி. தேஷ்பாண்டே, டி.கே. சிவகுமார் மற்றும் நைஸ் விளம்பரதாரரான அசோக் கெனி உள்ளிட்டோர் பற்றி விசாரணை நடத்த கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி லோக்ஆயுக்தா நீதிமன்ற நீதிபதி என்.கே. சுதிந்திர ராவ் போலீசாருக்கு உத்தரவிட்டார். இது தவிர நைஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிக்கு இடையேயான ஒப்பந்தம் குறித்தும் லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
முன்னாள் முதல்வர்கள் தேவே கௌடா, எதியூரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் 276 பேர் மீது லோக்ஆயுக்தா போலீசார் நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications