அமெரிக்க விமான படையில் 50 பெண்களை கற்பழித்த அதிகாரிக்கு 20 ஆண்டு சிறை!
லேக்லாண்ட்: அமெரிக்க விமான படையில் பயிற்சிக்கு வந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிகரிக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லேக்லாண்ட் என்ற இடத்தில் விமான படை பயிற்சி தளம் உள்ளது. விமான படைகளுக்கு தேர்வான நபர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. பயிற்சிக்கு வந்த பெண்களிடம், பயிற்சி கொடுக்கும் அதிகாரிகள் தவறாக நடந்து கொள்வதாக ஏராளமான புகார்கள் வந்தன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிகாரி ஒருவர் 35 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பயிற்சி பிரிவின் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பல கட்ட விசாரணையில் இதுவரை 50 பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேசிய பயிற்சி துறை தளபதி எட்வர்ட் ரைஸ், விமான படையில் பாலியல் வன்முறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். பயிற்சிக்கு வந்த பெண்களை சீரழித்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல பெண்களை கற்பழித்த லூயிஸ் வாக்கர் என்ற அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications