மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மம்தா பானர்ஜிக்கு ஜெயலலிதா ஆதரவு!

இதன்மூலம் இந்த விவகாரத்தில் திமுகவும் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்கும் நிலைமைக்கு கருணாநிதியை ஜெயலலிதா நெருக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த விவகாரத்தை முன் வைத்துத் தான் மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து விலகினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மத்திய அரசுக் கூட்டணி முலாயம் சிங், மாயாவதி ஆகியோரின் ஆதரவுடன் தான் ஆட்சியில் தொங்கிக் கொண்டுள்ளது.
இந் நிலையில் அன்னிய முதலீடு விவகாரத்தை முன்வைத்து மம்தா கொண்டு வரவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை மம்தாவின் பரம விரோதிகளான இடதுசாரிகளும் ஆதரித்தே ஆக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மம்தாவுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகிவிட்டது.
மம்தாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக பாஜக, சிபிஎம் ஆகியவையும் அதிமுக, தெலுங்கு தேசம் போன்றவையும் சேர்ந்து கொண்டால் மத்திய அரசின் நிலைமை படுமோசமாகிவிடும்.
அந்த நேரத்தில் மத்திய அரசைக் காக்க ஒரே வழி சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பது அல்லது வெளிநடப்பு செய்வது ஆகியவையே. அதே போல திமுகவும் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் அல்லது வெளிநடப்பு செய்துவிட வேண்டும்.
திமுக, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகியவை ஏதாவது எசகுபிசகு செய்துவிட்டால், ஆட்சியே கவிழ்ந்துவிடும். ஆனால், அன்னிய முதலீட்டை ஆதரித்து திமுக வாக்களித்தால் தமிழகத்தில், குறிப்பாக நாடார் சமூகத்தினரின் ஒட்டு மொத்த ஆதரவையும் இழக்க நேரிடும்.
வர்க்கத்தில் கொடி கட்டிப் பறக்கும் இந்த சமூகத்தினர் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவான நிலையை ஜெயலலிதா எடுத்திருப்பதால், திமுகவும் அதைச் சார்ந்த ஒரு முடிவையே எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், 2ஜி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் மாட்டியுள்ள திமுக இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிரச்சனை தர முன் வருமா என்பது தெரியவில்லை. தனது முடிவை சஸ்பென்சாகவே வைத்துள்ளார் கருணாநிதி.
நாளை திமுக எம்பிக்களின் கூட்டம் சென்னையில் நடக்கவுள்ளது. அதில் முக்கியமான முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
வரும் 22ம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் மம்தா, அதிமுகவின் அதிரடியை திமுகவும் காங்கிரசும் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பது தெரியவில்லை.
-
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்படும் மம்தா? திரிணாமுல் MLAக்கள் கூட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications