ஆந்திராவில் 'போலீஸ்' ஐயப்ப பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள்- வெடிக்கிறது புதிய சர்ச்சை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் போலீசார் தாடி வளர்க்க, மொட்டை அடிக்க, கருப்பு உடை அணிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திராவில் டூட்டியில் இருக்கும் போலீசார் தாடி வளர்க்க கூடாது, மொட்டை அடிக்கக் கூடாது, ஷூ அணியாமல் இருக்கக் கூடாது, காக்கி உடைதான் அணிய வேண்டும் என்று போலீஸ் துறைக்கு மெமோ அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மெமோ ஆந்திர போலீசாரிடமும் இந்து அமைப்புகளிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் போலீஸ் தலைமையகமோ, சபரிமலை ஐயப்பனுக்கு விரதமே இருக்கக் கூடாது என்பது இந்த மெமோவின் நோக்கம் அல்ல..அப்படி விரதம் இருப்பவர்கள் முறையாக லீவ் வாங்கிவிட்டுப் போகலாம் என்பதற்கான மெமோ என்கிறது.
ஐயப்பனுக்கு 48 நாள் விரதம் இருக்க வேண்டும். அப்படியானால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் லீவு எடுப்பது என்பது சாத்தியமில்லை என்கிறது போலீஸ் தரப்பு.
இந்த மெமோவை 48 மணி நேரத்துக்குள் விலக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று பாரதிய ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பழைய ஹைதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோயிலை விரிவாக்கும் செய்யும் விவகாரம் கடுமையான பதற்றத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் தற்போதைய மெமோ எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் என்கின்றனர் அரசியல் கட்சியினர்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications