பாட்னாவில் சாத் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அதலத் கஞ்சில் கங்கை கரையோரம் நேற்று மாலை சாத் திருவிழா நடந்தது. அப்போது ஏராளமான மக்கள் அங்கு கூடி வழிபாடு நடத்தினர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மூங்கில் பாலத்தை ஏராளமான மக்கள் கடந்து சென்றனர். அப்போது மூங்கில் பாலம் திடீர் என்று உடைந்தது. இதையடுத்து மக்கள் பயந்து கொண்டு வேகமாக பாலத்தை கடக்க முயன்றனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் குறுகிய பாலத்தில் முந்தியடித்துக் கொண்டு ஓடியபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அரசின் கவனக்குறைவு தான் காரணம் என்று பீகார் மாநில எதிர்கட்சியும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை முடிந்த 6 நாட்கள் கழித்து சூர்ய பகவானை ஆற்றங்கரையோரம் நின்று வழிபடுவது தான் சாத் திருவிழா. இந்த திருவிழா வட மாநிலங்களில் அதுவும் குறிப்பாக பீகாரில் மிகவும் பிரபலம். பக்தர்கள் 36 மணிநேரம் விரதம் இருந்து சூர்ய பகவானுக்கு கோதுமை, பால், கரும்பு மற்றும் தேங்காய் ஆகியவற்றை படைப்பர். கடந்த சனிக்கிழமை துவங்கிய இந்த திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications