சஸ்பென்ஸ் உடைப்பு- சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு திமுக எதிர்ப்பு

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியது. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மை அரசானது.
மத்திய அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு தெரிவிக்கும் சமாஜ்வாடி கட்சியும் கூட சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நடத்திய பிரம்மாண்ட டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது.
இந்நிலையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தைக் கொண்டுவருவதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தீவிரம்காட்டி வருகிறார். இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமது நிலைப்பாடு சஸ்பென்ஸாக இருக்கும் என்று திமுக கூறி வந்த நிலையில் நேற்று சென்னையில் டெசோ கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை திமுக ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டுவரப் போகும் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை திமுகவும் ஆதரிக்கக் கூடும் என்றே தெரிகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications