கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு புஷபராயனின் என்.ஜி.ஓ. ஆபிஸில் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

கூடங்குளம்: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புஷ்பராயனுக்கு சொந்தமான தொண்டு நிறுவனத்தில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இயங்கி வந்த 5 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஹேம்சந்த் சின்ஹா, இந்தர்ஜித்சிங், சங்குவான் ஆகியோர் அடங்கிய குழு நேற்று தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் இயங்கி வரும் கிழக்கு கடற்கரை ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் என்ற தொண்டு நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தியது. அந்நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இந்த நிறுவன நிர்வாகியான புஷ்பராயனின் மனைவி ஹேமாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு வரை நீடித்த விசாரணை இன்றும் தொடர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+