அலறவிடும் கரப்பான் பூச்சி கட்சி.. ராஜினாமா அறிவிப்பு வரும் வரை நகர மாட்டோம்! 4வது நாளாக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது. கல்வி முறையில் ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்விகளைக் கண்டித்து நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தில், பிள்ளைகளைப் பங்கேற்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்ற கரப்பான் பூச்சி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முதலில் ஆன்லைனில் வெறும் ஒரு இயக்கமாகத் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சி இப்போது நாடு முழுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நீட் விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போது டெல்லியில் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.

NEET Cockroach Janata Party

போராட்டம்

நீட் தேர்வுத்தாள் கசிவு சர்ச்சை மற்றும் மறுதேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜந்தர் மந்தரில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இந்த அமைதி வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் புகைப்படங்களுக்கு முன்னால் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். போராட்டக் களத்திற்கு வர முடியாத பொதுமக்கள், தங்களின் வீடுகளிலேயே மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாணவர்கள்

இந்த கூட்டத்தில் உரையாற்றிய கரப்பான் பூச்சி அமைப்பின் தலைவர் அபிஜித் திப்கே, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த குடும்பங்களில் பலர் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக அதிக அளவில் கடன் வாங்கியுள்ளனர் என்றும் பல குடும்பங்களுக்கு இந்த மாணவர்களே நிலையான எதிர்காலத்திற்கான ஒரே நம்பிக்கையாக இருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என்ற போதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

UPSC உள்ளிட்ட இதர போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களையும் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு வருமாறு இக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் மாணவர்கள் தங்களது குறைகளையும், தேர்வு முறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். அசம்பாவிதம் ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த போராட்டம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கானது என்றும் நாட்டின் நலனுக்காக அவர்களைப் போராட அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த போராட்டம் எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ எதிரானது அல்ல என்றும் மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தவறிய ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்விக்கு எதிரானது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தொடரும் போராட்டம்

கல்வித் துறையின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஜூன் 6ம் தேதி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது முதல் போராட்டத்தைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 20ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இந்த போராட்டம் ஓயாது என்று போராட்ட குழுவினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+