கீர்த்தனாவுக்கு புது சேலஞ்ச்.. வடக்கில் இருந்து வரும் மெகா தொழிற்சாலை முதலீடு.. ஆனா கடும் போட்டி!
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, நேற்று செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விளக்கத்தை கொடுத்தார். இதில் முக்கியமாக கீர்த்தனா கடந்த ஆட்சியில் 3.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 25 மெகா திட்டங்கள் ஊழல் மற்றும் தாமத ஒப்புதல் காரணமாக தமிழ்நாடு இழந்தது என குற்றம்சாட்டினார். இந்த நிலையில் அமைச்சருக்கு கீர்த்தனாவுக்கு வந்த புது சேலஞ்ச் வந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான பஜாஜ் ஆட்டோ தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இந்த புதிய தொழிற்சாலையை ஈர்க்க கடும் போட்டியில் இறங்கியுள்ளன.

பஜாஜ் ஆட்டோ ஏன் புதிய இடத்தை தேடுகிறது?
பஜாஜ் ஆட்டோ தற்போது மகாராஷ்டிராவில் உள்ள சாகன் மற்றும் அவுரங்காபாத் (சத்திரபதி சாம்பாஜிநகர்) தொழிற்சாலைகளில் தனது எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், மகாராஷ்டிரா அரசு செலுத்த வேண்டிய EV மானியத் தொகை ரூ.70 கோடிக்கும் அதிகமாக நிலுவையில் உள்ளதால், நிறுவனம் புதிய இடங்களை தேடத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்கள் பஜாஜ் ஆட்டோவின் புதிய EV தொழிற்சாலையை ஈர்க்க முயற்சி செய்து வருகின்றன.
தமிழ்நாட்டின் பலம் என்ன?
தமிழ்நாட்டில் ஓசூர் முதல் ராணிப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மறைமலைநகர் வரையிலான பகுதி நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலை மையமாக விளங்குகிறது. பல பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளை அமைத்து உள்நாட்டில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த வலுவான ஆட்டோமொபைல் சூழல், திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது, நல்ல உள்கட்டமைப்பு மற்றும் தொழில் நட்பு கொள்கைகள் காரணமாக தமிழ்நாடு பஜாஜ் ஆட்டோவுக்கு ஏற்ற இடமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெலங்கானா புதிய முதலீடுகளை பெருவதில் தீவிரமாக உள்ளது.
தெலங்கானாவின் முயற்சி
தெலங்கானாவும் பஜாஜ் ஆட்டோவின் புதிய EV தொழிற்சாலையை ஈர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறது. மாநில அரசு தொழில் முதலீட்டை ஈர்க்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது, இதற்கு முக்கிய காரணம் ஆந்திர மாநில அரசுகள் கடுமையான போட்டியை அளித்து வருகிறது.
பஜாஜ் ஆட்டோ தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை விரிவுபடுத்த விரும்புவதால், இரு மாநிலங்களும் இந்த திட்டத்தை ஈர்க்க கடும் போட்டியில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் யார் திறமையாகவும், மேம்பட்ட முறையிலும் பஜாஜ் ஆட்டோ உடன் ஆலோசனை செய்து முதலீட்டை ஈர்க்கிறார்கள் என்பது தெரிய வரும்.
மேலும் பஜாஜ் ஆட்டோ முதலீடு என்பது முந்தைய ஆட்சியில் துவங்கப்படாத முதலீடு திட்டம். இதனால் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதலீட்டை ஈர்த்தால் முழுக்க முழுக்க காரணம் அமைச்சர் கீர்த்தனாவையே சாரும். இதற்கு ஏற்றார் போல் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமான வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி- இறக்குமதி சூழ்நிலையும் உள்ளது.












Click it and Unblock the Notifications