தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்: புனே சிறையில் தண்டனை நிறைவேற்றம்

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.
மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இந்தத் தகவலை மத்திய அரசு ரகசியமாகவே வைத்திருந்தது.
இந் நிலையில் அவனை கடந்த நான்கு ஆண்டுகளாக வைத்திருந்த மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு போலீசார் இடம் மாற்றினர்.
எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications